Sorry, you need to enable JavaScript to visit this website.

Frequently Asked Questions

What to Expect in the Reporting Process

    Speak Up, We’re Listening என்பது Compass Group இன் புகாரளிக்கும் திட்டம். இது உங்கள் கவலை அல்லது எங்கள் வணிக நடத்தை விதிகளில் (“எங்கள் நெறிவிதிகள்”) மற்றும் பிற தரநிலைகள் மற்றும் கொள்கைகளில் மீறல்கள் சந்தேகிக்கப்பட்டால் அதை இரகசியமானக அல்லது அநாமதேயமான வழியில் புகாரளிக்கும் தெரிவினை உங்களுக்கு வழங்குகிறது.

    எங்கள் இரகசியப் புகாரளிப்புத் திட்டம் வருடத்தின் 365 நாட்களிலும், நாளின் 24 மணிநேரமும், வாரத்தின் 7 நாட்களிலும் நாங்கள் இயங்கக்கூடிய அனைத்து நாடுகளிலும் நீங்கள் விரும்பும் மொழியில் கிடைக்கப் பெறுகிறது.

    பெறப்படும் புகார்கள் நேரடியாக Group Ethics & Integrity (“E&I”) பார்வைக்கு அனுப்பப்படுகிறது. E&I என்பது ஏற்ற விதத்தில் பின் தொடர்வுக்காக மற்றும்/அல்லது விசாரணை மேற்கொள்வதற்காக இரகசியமாக ஆய்வு செய்து அறிக்கையளிக்கக்கூடிய, வேறு வணிகங்களைச் சாராத சுயேட்சையான, அக்கறையும் நம்பகத்தன்மையும் கொண்ட தொழில்வல்லுநர்கள் அடங்கிய பிரத்யேகக் குழுவாகும்.

    பழிவாங்கப்படும் பயமின்றி நன்னம்பிக்கையுடன் அக்கறைகொண்ட விவகாரங்களை, அவை தவறானதாகவோ அல்லது கண்டறியப்படாமலோ போவதாக இருந்தாலும்கூட நீங்கள் அவற்றை எழுப்பலாம் என்று உறுதியளிக்கிறோம்.

    ஒவ்வொருவரும் தங்களது கவலைகள் அல்லது பிரச்சினைகளுக்கு முடிந்தவரை விரைவாகவும் பயனுள்ள வகையிலும் சரியான உதவியையும் ஆதரவையும் கண்டறிய்வதற்கு நாங்கள் உதவ விரும்புகிறோம். உங்கள் கவலை எங்கள் வணிக நடத்தை விதி மீறலுக்கான வாய்ப்பாக அல்லது ஏதேனும் நெறியற்ற, சட்டவிரோத அல்லது பிற முறையற்ற சூழல்கள் அல்லது நடத்தைகள் சம்பந்தமானதாக இல்லாதவிடத்தில் நீங்கள் பின்வரும் வளங்களைப் பயன்படுத்த வேண்டும்:

    • இயக்கம் சார்ந்த சுகாதாரம், பாதுகாப்பு & சுற்றுச்சூழல் (“HSE”) பிரச்சினைகளுக்கு, உங்கள் HSE மேலாளரைத் தொடர்புகொள்ளவும்,
    • எங்கள் நெறிசார் விதிகள் மீறலோடு தொடர்பில்லாத உங்கள் சொந்த வேலைவாய்ப்பு நிலை அல்லது மனக்குறைகள்* உட்பட பணிச்சூழல்கள் தொடர்பான கவலைகளுக்கு, உங்கள் நேரடி மேலாளர், உங்கள் பிரிவு மேலாளர் அல்லது உங்கள் அகநிலை மனிதவளக் குழுவைத் தொடர்புகொண்டு இந்தக் கவலைகளை எழுப்பும்படி ஊக்குவிக்கிறோம்.

    *மனக்குறைகளுக்கான உதாரணங்களில் உங்கள் மேலாளர் அல்லது வேறொரு சக பணியாளர் அல்லது செயல்திறன், பணியுயர்வு, வேலை ஏற்பாடுகள் அல்லது ஒழுங்குமுறை நடவடிக்கை போன்ற ஆட்களுக்கிடையிலான முரண்பாடு ஆகியவை அடங்கும்.

    மேலும் விபரங்களுக்கு, எங்கள் இணையதளத்தில் உள்ள எங்களது Speak and Listen Up கொள்கையைப் பார்க்கவும்.

    எங்கள் நெறிவிதிகள் Compass உடன், இந்நிறுவனத்துக்காக அல்லது அதன் சார்பில் பணிபுரியும் ஒவ்வொருவருக்கும் பொருந்தும். இதில் விதிவிலக்கின்றி தற்காலிக மற்றும் ஒப்பந்தப் பணியாளர்களும் அவர்களது இருப்பிடம், பங்குப்பணி அல்லது பதவிநிலை எதுவாயிருந்தாலும் அவர்களும் அடங்குவர். எங்கள் வணிகம் மற்றும் வழங்கல் சங்கிலி கூட்டாளர்களும் (அவர்களது பணியாளர்களையும்) எங்கள் உலகளாவிய வழங்குநருக்கான நடத்தைவிதியுடன் (“வழங்குநர் நெறிவிதிகள்”) இணங்காதவை உட்பட முறையற்ற சூழ்நிலைகள் குறித்த கவலைகளை எழுப்ப Compass இன் Speak Up திட்டத்தைப் பயன்படுத்த ஊக்குவிக்கிறோம்.

    Compass இன் Speak Up திட்டம் வாயிலாக, நடந்துகொண்டிருப்பதாக அல்லது நடந்திருப்பதாகக் கருதப்படுபவற்றை எங்கள் நெறிவிதிகள் அல்லது வழங்குநர் நெறிவிதிகள் (ஒட்டுமொத்தமாக “எங்கள் நெறிவிதிகள்”) உடன் முரண்படக்கூடிய சூழ்நிலைகள் குறித்த கவலைகளைப் புகாரளிப்பதற்கு நம் அனைவருக்கும் கடமையும் உரிமையும் உண்டு.

    எங்கள் நெறிவிதிகள், தரநிலைகள், கொள்கைகள் மற்றும் நடைமுறைகள் மீறலில் பின்வருபவை உட்பட ஏனையவை அடங்கும்;

    • இலஞ்ச ஊழல்,
    • நலன் முரண்பாடு,
    • மோசடி,
    • திருட்டு,
    • போட்டி பிரச்சினைகள்,
    • நிதி முறைகேடுகள்,
    • பொய்க் கணக்கு,
    • நிதிசார் தவறான அறிக்கைகள் மற்றும் தவறான தகவல்கள்,
    • பண மோசடி,
    • தீவிரவாதிகளுக்கு நிதியளித்தல்,
    • வரி ஏய்ப்பு,
    • வெளிப்படுத்துகைக்கான கடப்பாடுகள் உட்பட சட்டம் அல்லது ஒழுங்குமுறைத் தேவைகளுக்கு இணங்கத் தவறுதல் அல்லது மீறுதல்,
    • பழிவாங்கல்,
    • சட்டவிரோத போதைப்பொருட்கள் அல்லது போதை வஸ்து பயன்பாடு,
    • வம்பிழுத்தல் அல்லது துன்புறுத்தல்,
    • பாகுபாடு,
    • வன்முறை அச்சுறுத்தல்,
    • வன்முறை,
    • பாலியல் துன்புறுத்தல்,
    • பாலியல் வன்கொடுமை,
    • சொத்துக்களைச் சேதம் செய்யும் குற்றச்செயல்,
    • மனித உரிமைப் பிரச்சினைகள்,
    • நவீன அடிமைத்தனம்,
    • குழந்தைகளுக்கெதிரான சுரண்டல்,
    • உள்நாட்டு மக்களின் உரிமைகளில் மீறல்,

    மக்களுக்கு, சுற்றுச்சூழலுக்கு அல்லது நிதியமைப்புக்கு அபாயத்தை ஏற்படுத்தும் நடத்தை.

    புகார்களுக்கு Speak Up வழக்குக் குறிப்பு ஒதுக்கப்பட்டு தானாகவே E&I பார்வைக்கு எடுத்துச் செல்லப்படும். அவர்கள் விசாரனைக்கு ஒதுக்குவது உட்பட ஒவ்வொரு புகாரையும் மதிப்பிடுவதற்கும் பின் தொடர்வதற்கான சரியான முறையையும் தீர்மானிப்பதற்காக ஆய்வு செய்வர். Speak Up வழக்கு விசாரணை நடைமுறைக்குப் பின்வரும் கொள்கைகள் பொருந்தும்:

    • அனைத்து Speak-Up கவலைகளுக்கும், புகார் எந்தவழியில் அளிக்கப்பட்டிருந்தாலும் அவை E&I மூலம் பெறப்பட்டு இரகசியமாய் ஆய்வு செய்யப்படுகின்றன. புகார் சமர்ப்பிக்கும்போது நீங்கள் விரும்பினால் (உள்நாட்டுச் சட்டத் தேவைகளைப் பொறுத்து) தொடர்ந்து அநாமதேயமாக இருக்கலாம்;
    • வழக்கு ஆய்வுசெய்யப்பட்டதும், உங்கள் வழக்கைப் பின் தொடர்வதற்காக நியமிக்கப்படும் நபர் உட்பட E&I அடுத்த நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கும்; மற்றும்
    • இந்த விவகாரத்தில் முன்னேற்றம் காண உதவுவதற்காக, பொருந்துமிடத்தில், நீங்கள் எழுப்பிய கவலைகளைத் தீர்க்க அல்லது அதை ஆராய்ந்து மேற்கொண்டு நடவடிக்கைகளை எடுப்பதற்காக E&I சில துவக்கநிலைக் கேள்விகளைக் கேட்கலாம். உங்கள் கவலை(கள்)-ஐச் சமர்ப்பிக்கும்போது உங்கள் புகாரை அவ்வப்போது திரும்பச் சரிபார்ப்பதற்காக, உங்கள் வழக்கு முன்ன்னேற்றத்தை இற்றைப்படுத்துவதற்காக ஆவணங்கள் மற்றும் கோப்புகள், பார்வைக் குறிப்புகள், தேதிகள் மற்றும் நேரங்கள் மற்றும் சம்பந்தப்பட்ட கட்சிக்காரர் தகவல்கள் உள்ளிட்ட விபரங்களை முடிந்தவரை மறக்காமல் வழங்குங்கள். சரியான காரியத்தைச் செய்வதில் எங்கள் மக்களுக்கும் கூட்டாளிகளுக்கும் உதவுவதற்காகவே நாங்கள் இங்கே இருக்கிறோம்.

     

    ஏதாவது சரியில்லையென்று தோன்றினால், உங்கள் உள்ளுணர்வு சொல்வதைக்கேளுங்கள். Speak Up, We’re Listening.

    நன்னம்பிக்கையுடன் புகார் செய்யும் எந்த நபரின் இரகசியத்தன்மையையும் Compass பாதுகாக்கும். நன்னம்பிக்கையுடன் எழுப்பிய கவலைகள் சம்பந்தமாக, அது பின்னர் தவறானதாக அல்லது காணப்படாததாகவோ கண்டறியப்பட்டால் உங்கள்மீது ஒழுங்கு நடவடிக்கையையோ அல்லது தீங்கையோ எதிர்கொள்ள மாட்டீர்கள் என உறுதியளிக்கிறோம்.

    எழுப்பப்பட்ட கவலைகளைக் கையாள்வோர் மற்றும் விசாரிப்பவர்களுக்கு அப்பால் உங்கள் ஒப்புதல் இல்லாமல் உங்கள் அடையாளம் வெளியிடப்படாது. இந்த விஷயத்தைப் பார்ப்பது, விசாரணையை மேற்கொள்வது மற்றும்/அல்லது சட்ட அல்லது இணக்க ஆலோசனையைப் பெறுவது ஆகியவற்றின் பின்னணியில் இது அவசியமானதாக, விகிதாச்சாரமாக இல்லாவிட்டால், கண்டறிதல்கள் அல்லது பரிகார நடவடிக்கைகளைப் பெறுவதற்கும் செயல்படுவதற்கும் கண்டிப்பான தெரிந்துகொள்ளும் தேவையை பராமரிப்பது இதில் அடங்கும்.

    கவலையை எழுப்புவதற்காக அல்லது ஒரு கவலையை எழுப்ப முடிவதற்காக Compass பழிவாங்கல் அல்லது தீங்கு விளைவிக்கும் நடத்தையைக் கடுமையாகத் தடைசெய்வதுடன் அதைப் பொறுத்துக்கொள்ளவும் செய்யாது. பழிவாங்கப்படுவது அல்லது தீங்கான நடத்தைக்கு ஆளாவதிலிருந்து உங்களைப் பாதுகாக்க நியாயமான அனைத்து நடவடிக்கைகளையும் Compass எடுக்கும். நீங்கள் அல்லது உங்களுக்கு நெருக்கமான ஒருவர் கவலையை எழுப்பியதற்கு (அல்லது எழுப்ப முடிவதற்காக) பழிவாங்கப்பட்டால் E&I ஆய்வுக்காக புதிய Speak Up செய்யும்படி உங்களை மிகவும் ஊக்குவிக்கிறோம். Speak Up நடைமுறையின் நேர்மையை உறுதிசெய்ய, நீங்கள் வழங்கிய தகவல்கள் மற்றும் E&I உடனான ஈடுபாடுகள் தொடர்பாக இரகசியத்தன்மையையும் நடுநிலையையும் மதிப்பீர்கள் என்று உங்களை எதிர்பார்க்கிறோம்.

    All reports submitted are routed to only specific individuals within your organization and outside legal counsel who are responsible for reviewing and evaluating the specific category of information that you provided. Each of these recipients has vast experience in reviewing matters and conducting investigations in a thorough, impartial, and confidential manner.

    Retaliation against anyone for reporting or participating in the investigation of any complaint is prohibited. Anyone found to have engaged in retaliation is subject to disciplinary action. If at any time you believe you have been subject to retaliation for raising a concern or for participating in the investigation of a concern raised, please immediately report it so it can be properly investigated.

    All Rights Reserved