Sorry, you need to enable JavaScript to visit this website.

COMPASS GROUP இன் SPEAK UP, WE'RE LISTENING வாயிலுக்கு உங்களை வரவேற்கிறோம். எது சரியானதோ அதைச் செய்யும் உங்கள் துணிவுக்கு நன்றி.

நீங்கள் தனியாக இல்லை. உலகெங்கிலும் நான்காயிரத்துக்கும் மேற்பட்ட மக்களும் எங்களைத் தொடர்புகொண்டுள்ளனர்.

Compass இன் வணிகத்தில் ஆர்வம் கொண்ட யாராயிருந்தாலும் நெறிசார்ந்த கவலைகள் மற்றும் பிரச்சினைகள் குறித்த வழிகாட்டுதலைப் பெற, உங்கள் கருத்துகளை தடையின்றி வெளிப்படுத்தவும்,எங்கள் வணிக நடத்தை விதிகளில் வாய்ப்புள்ள மீறல்கள் சம்பந்தமாக ஏதேனும் கவலைகளை நம்பிக்கையுடன் புகாரளிக்கவும் எங்கள் இரகசிய புகாரளிக்கும் திட்டமான Speak Up, We’re Listening பயன்படுத்த ஊக்குவிக்கிறோம். 

ஒன்று உங்களுக்குச் சரியாகத் தோன்றாவிட்டால், உங்கள் உள்ளுணர்வுகள் சொல்வதைக் கேளுங்கள் என்ற கொள்கையைப் பின்பற்றுகிறோம். Speak Up, We’re Listening.

நேர்மை உங்களுக்கு வழிகாட்டட்டும். எப்போதும்.

ஒரு கவலையை ஆன்லைனில் புகார்செய்தல்

உடல் நிந்தனை, போதைப்பொருள் & மது, துன்புறுத்தல், மனித உரிமைப் பிரச்சினைகள், இலஞ்ச ஊழல், போட்டி பிரச்சினைகள், திருட்டு மற்றும் மோசடி அல்லது பிற சட்டவிரோத நடவடிக்கைகள் போன்ற வணிக நடத்தை விதிகள் குறித்த கவலைகளைப் புகாரளிப்பதை இந்த அமைப்பு எளிமைப்படுத்தியுள்ளது. 

பின் தொடர்வு

உங்கள் புகார் அல்லது கேள்வியை நீங்கள் சமர்ப்பித்தபோது உருவாக்கிய அணுகல் எண்ணையும் கடவுச்சொல்லையும் பயன்படுத்தி புகார் அல்லது கேள்வியின் நிலையைக் காணலாம். இந்த வசதியைப் பயன்படுத்தி Group Ethics & Integrity அல்லது உங்கள் புகாரைக் கவனிக்க நியமிக்கப்பட்ட நபருடன் இரகசியமாகத் தொடர்புகொள்ளலாம் 

எங்கள் நெறிமுறை தொலைபேசி எண்ணை அழையுங்கள்

ஒருவருடன் இரகசியமாகப் பேசுவதை நீங்கள் விரும்பினால், எங்களை அழையுங்கள். எங்கள் பிரதிநிதிகளில் ஒருவர் உங்களுக்கு உதவத் தயாராக உள்ளார்.

கேள்வி கேட்டல்

உங்களுக்கு நெறிமுறைகள் அலது இணக்கம் சார்ந்த கேள்வியிருந்தால் அல்லது நீங்கள் எதிர்கொள்ளும் நெறிசார் குழப்பம் தொடர்பாக ஆலோசனை தேவைப்பட்டால் Group Ethics & Integrity (“E&I”) வசம் நீங்கள் இர்கசியமாகக் கேட்கலாம். 

வணிக நடத்தை விதிகள்

Compass இன் வணிக நடத்தை விதிகள் (எங்கள் “விதிகள்”) நாங்கள் யார் என்பதைப் பிரதிபலிப்பதுடன் தெளிவான பாதையையும் வழங்குகிறது – Compass உடன் பணிபுரியும், இந்நிறுவனத்துக்காக, அல்லது இதன் சார்பாக – எது சரியானதோ அதையே எப்போதும் செய்யுங்கள். 

வேலையில் ஒரு சூழ்நிலையை நீங்கள் எதிர்கொள்ளும்போது, சரியான நடவடிக்கை உங்களுக்குத் தெளிவாகத் தெரியாவிட்டால், உதவிக்கும் வழிகாட்டுதலுக்கும் நீங்கள் எப்போதும் எங்கள் விதிகள் பக்கம் வரலாம் என்பது உங்கள் நினைவில் இருக்குமென நம்புகிறோம். 

    Speak Up, We’re Listening என்பது Compass Group இன் புகாரளிக்கும் திட்டம். இது உங்கள் கவலை அல்லது எங்கள் வணிக நடத்தை விதிகளில் (“எங்கள் நெறிவிதிகள்”) மற்றும் பிற தரநிலைகள் மற்றும் கொள்கைகளில் மீறல்கள் சந்தேகிக்கப்பட்டால் அதை இரகசியமானக அல்லது அநாமதேயமான வழியில் புகாரளிக்கும் தெரிவினை உங்களுக்கு வழங்குகிறது.

    எங்கள் இரகசியப் புகாரளிப்புத் திட்டம் வருடத்தின் 365 நாட்களிலும், நாளின் 24 மணிநேரமும், வாரத்தின் 7 நாட்களிலும் நாங்கள் இயங்கக்கூடிய அனைத்து நாடுகளிலும் நீங்கள் விரும்பும் மொழியில் கிடைக்கப் பெறுகிறது.

    பெறப்படும் புகார்கள் நேரடியாக Group Ethics & Integrity (“E&I”) பார்வைக்கு அனுப்பப்படுகிறது. E&I என்பது ஏற்ற விதத்தில் பின் தொடர்வுக்காக மற்றும்/அல்லது விசாரணை மேற்கொள்வதற்காக இரகசியமாக ஆய்வு செய்து அறிக்கையளிக்கக்கூடிய, வேறு வணிகங்களைச் சாராத சுயேட்சையான, அக்கறையும் நம்பகத்தன்மையும் கொண்ட தொழில்வல்லுநர்கள் அடங்கிய பிரத்யேகக் குழுவாகும்.

    பழிவாங்கப்படும் பயமின்றி நன்னம்பிக்கையுடன் அக்கறைகொண்ட விவகாரங்களை, அவை தவறானதாகவோ அல்லது கண்டறியப்படாமலோ போவதாக இருந்தாலும்கூட நீங்கள் அவற்றை எழுப்பலாம் என்று உறுதியளிக்கிறோம்.

    ஒவ்வொருவரும் தங்களது கவலைகள் அல்லது பிரச்சினைகளுக்கு முடிந்தவரை விரைவாகவும் பயனுள்ள வகையிலும் சரியான உதவியையும் ஆதரவையும் கண்டறிய்வதற்கு நாங்கள் உதவ விரும்புகிறோம். உங்கள் கவலை எங்கள் வணிக நடத்தை விதி மீறலுக்கான வாய்ப்பாக அல்லது ஏதேனும் நெறியற்ற, சட்டவிரோத அல்லது பிற முறையற்ற சூழல்கள் அல்லது நடத்தைகள் சம்பந்தமானதாக இல்லாதவிடத்தில் நீங்கள் பின்வரும் வளங்களைப் பயன்படுத்த வேண்டும்:

    • இயக்கம் சார்ந்த சுகாதாரம், பாதுகாப்பு & சுற்றுச்சூழல் (“HSE”) பிரச்சினைகளுக்கு, உங்கள் HSE மேலாளரைத் தொடர்புகொள்ளவும்,
    • எங்கள் நெறிசார் விதிகள் மீறலோடு தொடர்பில்லாத உங்கள் சொந்த வேலைவாய்ப்பு நிலை அல்லது மனக்குறைகள்* உட்பட பணிச்சூழல்கள் தொடர்பான கவலைகளுக்கு, உங்கள் நேரடி மேலாளர், உங்கள் பிரிவு மேலாளர் அல்லது உங்கள் அகநிலை மனிதவளக் குழுவைத் தொடர்புகொண்டு இந்தக் கவலைகளை எழுப்பும்படி ஊக்குவிக்கிறோம்.

    *மனக்குறைகளுக்கான உதாரணங்களில் உங்கள் மேலாளர் அல்லது வேறொரு சக பணியாளர் அல்லது செயல்திறன், பணியுயர்வு, வேலை ஏற்பாடுகள் அல்லது ஒழுங்குமுறை நடவடிக்கை போன்ற ஆட்களுக்கிடையிலான முரண்பாடு ஆகியவை அடங்கும்.

    மேலும் விபரங்களுக்கு, எங்கள் இணையதளத்தில் உள்ள எங்களது Speak and Listen Up கொள்கையைப் பார்க்கவும்.

    எங்கள் நெறிவிதிகள் Compass உடன், இந்நிறுவனத்துக்காக அல்லது அதன் சார்பில் பணிபுரியும் ஒவ்வொருவருக்கும் பொருந்தும். இதில் விதிவிலக்கின்றி தற்காலிக மற்றும் ஒப்பந்தப் பணியாளர்களும் அவர்களது இருப்பிடம், பங்குப்பணி அல்லது பதவிநிலை எதுவாயிருந்தாலும் அவர்களும் அடங்குவர். எங்கள் வணிகம் மற்றும் வழங்கல் சங்கிலி கூட்டாளர்களும் (அவர்களது பணியாளர்களையும்) எங்கள் உலகளாவிய வழங்குநருக்கான நடத்தைவிதியுடன் (“வழங்குநர் நெறிவிதிகள்”) இணங்காதவை உட்பட முறையற்ற சூழ்நிலைகள் குறித்த கவலைகளை எழுப்ப Compass இன் Speak Up திட்டத்தைப் பயன்படுத்த ஊக்குவிக்கிறோம்.

    Compass இன் Speak Up திட்டம் வாயிலாக, நடந்துகொண்டிருப்பதாக அல்லது நடந்திருப்பதாகக் கருதப்படுபவற்றை எங்கள் நெறிவிதிகள் அல்லது வழங்குநர் நெறிவிதிகள் (ஒட்டுமொத்தமாக “எங்கள் நெறிவிதிகள்”) உடன் முரண்படக்கூடிய சூழ்நிலைகள் குறித்த கவலைகளைப் புகாரளிப்பதற்கு நம் அனைவருக்கும் கடமையும் உரிமையும் உண்டு.

    எங்கள் நெறிவிதிகள், தரநிலைகள், கொள்கைகள் மற்றும் நடைமுறைகள் மீறலில் பின்வருபவை உட்பட ஏனையவை அடங்கும்;

    • இலஞ்ச ஊழல்,
    • நலன் முரண்பாடு,
    • மோசடி,
    • திருட்டு,
    • போட்டி பிரச்சினைகள்,
    • நிதி முறைகேடுகள்,
    • பொய்க் கணக்கு,
    • நிதிசார் தவறான அறிக்கைகள் மற்றும் தவறான தகவல்கள்,
    • பண மோசடி,
    • தீவிரவாதிகளுக்கு நிதியளித்தல்,
    • வரி ஏய்ப்பு,
    • வெளிப்படுத்துகைக்கான கடப்பாடுகள் உட்பட சட்டம் அல்லது ஒழுங்குமுறைத் தேவைகளுக்கு இணங்கத் தவறுதல் அல்லது மீறுதல்,
    • பழிவாங்கல்,
    • சட்டவிரோத போதைப்பொருட்கள் அல்லது போதை வஸ்து பயன்பாடு,
    • வம்பிழுத்தல் அல்லது துன்புறுத்தல்,
    • பாகுபாடு,
    • வன்முறை அச்சுறுத்தல்,
    • வன்முறை,
    • பாலியல் துன்புறுத்தல்,
    • பாலியல் வன்கொடுமை,
    • சொத்துக்களைச் சேதம் செய்யும் குற்றச்செயல்,
    • மனித உரிமைப் பிரச்சினைகள்,
    • நவீன அடிமைத்தனம்,
    • குழந்தைகளுக்கெதிரான சுரண்டல்,
    • உள்நாட்டு மக்களின் உரிமைகளில் மீறல்,

    மக்களுக்கு, சுற்றுச்சூழலுக்கு அல்லது நிதியமைப்புக்கு அபாயத்தை ஏற்படுத்தும் நடத்தை.

    புகார்களுக்கு Speak Up வழக்குக் குறிப்பு ஒதுக்கப்பட்டு தானாகவே E&I பார்வைக்கு எடுத்துச் செல்லப்படும். அவர்கள் விசாரனைக்கு ஒதுக்குவது உட்பட ஒவ்வொரு புகாரையும் மதிப்பிடுவதற்கும் பின் தொடர்வதற்கான சரியான முறையையும் தீர்மானிப்பதற்காக ஆய்வு செய்வர். Speak Up வழக்கு விசாரணை நடைமுறைக்குப் பின்வரும் கொள்கைகள் பொருந்தும்:

    • அனைத்து Speak-Up கவலைகளுக்கும், புகார் எந்தவழியில் அளிக்கப்பட்டிருந்தாலும் அவை E&I மூலம் பெறப்பட்டு இரகசியமாய் ஆய்வு செய்யப்படுகின்றன. புகார் சமர்ப்பிக்கும்போது நீங்கள் விரும்பினால் (உள்நாட்டுச் சட்டத் தேவைகளைப் பொறுத்து) தொடர்ந்து அநாமதேயமாக இருக்கலாம்;
    • வழக்கு ஆய்வுசெய்யப்பட்டதும், உங்கள் வழக்கைப் பின் தொடர்வதற்காக நியமிக்கப்படும் நபர் உட்பட E&I அடுத்த நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கும்; மற்றும்
    • இந்த விவகாரத்தில் முன்னேற்றம் காண உதவுவதற்காக, பொருந்துமிடத்தில், நீங்கள் எழுப்பிய கவலைகளைத் தீர்க்க அல்லது அதை ஆராய்ந்து மேற்கொண்டு நடவடிக்கைகளை எடுப்பதற்காக E&I சில துவக்கநிலைக் கேள்விகளைக் கேட்கலாம். உங்கள் கவலை(கள்)-ஐச் சமர்ப்பிக்கும்போது உங்கள் புகாரை அவ்வப்போது திரும்பச் சரிபார்ப்பதற்காக, உங்கள் வழக்கு முன்ன்னேற்றத்தை இற்றைப்படுத்துவதற்காக ஆவணங்கள் மற்றும் கோப்புகள், பார்வைக் குறிப்புகள், தேதிகள் மற்றும் நேரங்கள் மற்றும் சம்பந்தப்பட்ட கட்சிக்காரர் தகவல்கள் உள்ளிட்ட விபரங்களை முடிந்தவரை மறக்காமல் வழங்குங்கள். சரியான காரியத்தைச் செய்வதில் எங்கள் மக்களுக்கும் கூட்டாளிகளுக்கும் உதவுவதற்காகவே நாங்கள் இங்கே இருக்கிறோம்.

     

    ஏதாவது சரியில்லையென்று தோன்றினால், உங்கள் உள்ளுணர்வு சொல்வதைக்கேளுங்கள். Speak Up, We’re Listening.

    நன்னம்பிக்கையுடன் புகார் செய்யும் எந்த நபரின் இரகசியத்தன்மையையும் Compass பாதுகாக்கும். நன்னம்பிக்கையுடன் எழுப்பிய கவலைகள் சம்பந்தமாக, அது பின்னர் தவறானதாக அல்லது காணப்படாததாகவோ கண்டறியப்பட்டால் உங்கள்மீது ஒழுங்கு நடவடிக்கையையோ அல்லது தீங்கையோ எதிர்கொள்ள மாட்டீர்கள் என உறுதியளிக்கிறோம்.

    எழுப்பப்பட்ட கவலைகளைக் கையாள்வோர் மற்றும் விசாரிப்பவர்களுக்கு அப்பால் உங்கள் ஒப்புதல் இல்லாமல் உங்கள் அடையாளம் வெளியிடப்படாது. இந்த விஷயத்தைப் பார்ப்பது, விசாரணையை மேற்கொள்வது மற்றும்/அல்லது சட்ட அல்லது இணக்க ஆலோசனையைப் பெறுவது ஆகியவற்றின் பின்னணியில் இது அவசியமானதாக, விகிதாச்சாரமாக இல்லாவிட்டால், கண்டறிதல்கள் அல்லது பரிகார நடவடிக்கைகளைப் பெறுவதற்கும் செயல்படுவதற்கும் கண்டிப்பான தெரிந்துகொள்ளும் தேவையை பராமரிப்பது இதில் அடங்கும்.

    கவலையை எழுப்புவதற்காக அல்லது ஒரு கவலையை எழுப்ப முடிவதற்காக Compass பழிவாங்கல் அல்லது தீங்கு விளைவிக்கும் நடத்தையைக் கடுமையாகத் தடைசெய்வதுடன் அதைப் பொறுத்துக்கொள்ளவும் செய்யாது. பழிவாங்கப்படுவது அல்லது தீங்கான நடத்தைக்கு ஆளாவதிலிருந்து உங்களைப் பாதுகாக்க நியாயமான அனைத்து நடவடிக்கைகளையும் Compass எடுக்கும். நீங்கள் அல்லது உங்களுக்கு நெருக்கமான ஒருவர் கவலையை எழுப்பியதற்கு (அல்லது எழுப்ப முடிவதற்காக) பழிவாங்கப்பட்டால் E&I ஆய்வுக்காக புதிய Speak Up செய்யும்படி உங்களை மிகவும் ஊக்குவிக்கிறோம். Speak Up நடைமுறையின் நேர்மையை உறுதிசெய்ய, நீங்கள் வழங்கிய தகவல்கள் மற்றும் E&I உடனான ஈடுபாடுகள் தொடர்பாக இரகசியத்தன்மையையும் நடுநிலையையும் மதிப்பீர்கள் என்று உங்களை எதிர்பார்க்கிறோம்.

    குரல்கொடுப்பது சரியான செயல் என்று நம் அனைவருக்கும் தெரியும். ஆனால் அது சரி என்பதாலேயே அது எளிது என்று அர்த்தமில்லை. ஒன்றை எப்போது எப்படிச் சொல்வது என்று அறிவது கடினமானதாக இருக்கலாம். நமது கவலைகள் குறித்து யாருடன் பேசுவது என்பதும் உறுதியாகத் தெரியாமல் இருக்கலாம்.

    நமது நெறிவிதிகளில் சந்தேகிக்கப்படும் அல்லது உள்ளபடியான மீறல்கள் குறித்த வினவல்களுக்கு, நாம் மிக வசதியாக உணரக்கூடிய வகையில், ஆழ்ந்த நம்பிக்கை வைத்திருக்கும் ஒருவரிடம் எங்களது Speak Up வளங்களில் ஒன்றைப் பயன்படுத்தி சொல்ல வேண்டும்:

    • எங்கள் நேரடி மேலாளர் அல்லது முதுநிலை மேலாளர்
    • எங்கள் அகநிலை மனிதவள மேலாளர் அல்லது Listen Up Champion*
    • நம் நாட்டு உறுப்பினர், பிராந்திய அல்லது குழும சட்டக்குழு
    • Group Ethics & Integrity உறுப்பினர்
    • அல்லது தயாராயிருக்கும்போது, நமது கவலையை Speak Up தளத்தில் எழுப்புங்கள்

    *Listen Up Champions (“LUC”) என்போர் Speak Up, We’re Listening திட்டத்துக்கான தூதுவர்கள். உங்கள் கவலைகளை நேரடியாக விவாதிக்க விரும்புகிறீர்களா அல்லது ஒருவேளை நீங்கள் பார்த்த அல்லது கேள்விப்பட்ட ஒன்று உங்களுக்கு ஒருவேளை உறுதியாகத் தெரியவில்லை என்றால் மற்றும் அடுத்து என்ன செய்வது என்பதில் வழிகாட்டி உதவுவதற்கு ஒரு பலமான குழுவை நீங்கள் விரும்பினால் உங்கள் நாட்டில் LUC ஐ நம்பிக்கையுடன் அணுகமுடியும்.

    உங்கள் குரலை எவ்வாறு எழுப்புவது என்ற தேர்வு முழுக்கவே உங்களுடையது. நாங்கள் உங்களை ஊக்குவிப்பதெலாம் Speak Up, We’re Listening என்பதுதான்.

    All Rights Reserved